தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாள் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்
அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகின்றன.அதேபோல திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் ஆர்.கே. ராஜா தலைமையில் நடிகர் விஜய் அவர்களின் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது மேலும் தங்கத்தேர் இழுக்கு வைபவம் நடைபெற்றது இதில் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.மேலும் விஜய் அவர்களில் பிறந்தநாளை முன்னிட்டு கோவில் அருகே கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் தொட்டியம் பாராதிராஜா, மிளகுபாறை சுப்ரமணி, ஜீவா , உறையூர் சரண் ராஜ், லால்குடி மண்ணச்சநல்லூர் சுரேஷ், லால்குடி கலைவாணன் ,லோகு ரமேஷ்,சூர்யா, புத்தூர் நடராஜ், பாபு , மலைக்கோட்டை நசீர், சமயபுரம் அஸ்வின், திருவாதிரை பேச்சாளர் கவிஞர் லோகநாதன், சங்கர், பார்த்திபன், பாரதி,நவீன், சுறா சுகுமார், மண்ணச்சநல்லூர் கலைவாணன், தொட்டியம் சுஜன் , ஹரி, ஆலம் தெரு ஷாம், தீபேஷ் ஆகியோர் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்
0 Comments