// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** வக்பு சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மத்திய அரசு கைவிடவேண்டும் - திருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் தீர்மானம்

வக்பு சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மத்திய அரசு கைவிடவேண்டும் - திருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் தீர்மானம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச்சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மகளிர் அணி சார்பில் வக்ஃப் உரிமை மீட்பு மகளிர் மாநாடு மரக்கடையில், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் மூமீனாபேகம் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ கட்சி மாநிலதலைவர் நெல்லை முபாரக் சிறப்புரை ஆற்றினார்.மாநாட்டில் எஸ்பிபிஐ கட்சியினர் மற்றும் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


மாநாட்டில் சட்டவிரோத வக்பு திட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதுடன், வக்ஃப் சட்டத்தை திரும்பபெறவேண்டும், 


உச்சநீதிமன்றம் தற்போதைய சூழ்நிலை தொடரவேண்டும் என்று கூறியிருக்கின்ற நிலையில் உச்சநீதிமன்றத்தை மதிக்காமல் வக்ஃப் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என அதற்கான முயற்சியை  எடுக்கும் மத்திய அரசை வன்மையாககண்டிப்பதும்,  உடனடியாக நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை கைவிடவேண்டும், சமூக வலைத்தளங்களில் பெண்களை கேலிச்சித்திரமாகவும், ஆபாசம் நிறைந்த மோகபொருளாக காட்டும் செயலிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments