திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெ. பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சி ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும்,முன்னாள் ஆவின் சேர்மனுமான இன்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதி வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் என்.எஸ். பூபதி, அன்பழகன், கலீல் ரஹ்மான், கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, மகளிர் அணி செயலாளர் நசீமா பாரீக், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த்,மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ், கலை பிரிவு செயலாளர் ஜான் எட்வர்ட் குமார், இளம் பெண்கள் பாசறை செயலாளர் லோகநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் சுரேஷ்பாபு, பொன்னர்,பேரவை மாவட்ட துணைச் செயலாளர்கள் கருமண்டபம் சுரேந்தர், புத்தூர் கோழிக்கடை பாலு, வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சசிகுமார், மகளிர் அணி இணை செயலாளர் ஜெயஸ்ரீ, வழக்கறிஞர் கௌசல்யா, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அப்பா குட்டி, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், கே .பி.சண்முகம், ஜெயக்குமார், எடத்தெரு பாபு, ராஜ்மோகன், வசந்தம் செல்வமணி, கதிர்வேல், ராமலிங்கம், ரபீக், ரவீந்திரன், டைமன் தாமோதரன், பழ.மாரிமுத்து, செல்லப்பா,ஐடி.நாகராஜ், கருமண்டபம் பெருமாள் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments