// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் மகாலில்  நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது தலைமை தாங்கினார்


தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் முகமது ரபீக் தொடக்க உரை ஆற்றினார்.


தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை சையது மாநாடு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.

ஜூலை 6 மதுரையில் ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும், வக்ப் ஒழிப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மனித நேய மக்கள் கட்சி நடத்தும் எழுச்சி பேரணி மற்றும் மாநாட்டில் திருச்சி  மேற்கு மாவட்டத்தின் சார்பாக 100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயிரக்கானோர் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. 

தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், IT Wing மாநில துணை செயலாளர் நஜீர், SMI மாநில துணை செயலாளர் அப்பீஸ், உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட துணை மற்றும் அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய பகுதி கழக நிர்வாகிகள், வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments