// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி M.I.E.T. பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்சி M.I.E.T. பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்சி குண்டூர் M.I.E.T. பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.M.I.E.T. கல்வி நிறுவனர் தலைவர் Er A. முகமது யூனுஸ் அவர்கள் விழா தலைமை ஏற்று முன்னாள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். வளரும் புதிய பொறியாளர்க்கு வாழ்நாள் முழுவதும் கற்றலின் மதிப்பை வலியுறுத்தி வளர்ச்சி மனப்பாண்மையை தழுவி புதிய தொழில் முனைவோர்களாக வரவேண்டுமென்று ஊக்குவித்தார். 

முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் நமது கல்லூரியில் பயிலும் இன்றைய மாணவர்களுக்கு தாங்கள் பணி புரியும் நிறுவனங்களில் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.கல்லூரி துணைத்தலைவர் எம்.ஒய். அப்துல் ஜலீல் அவர்கள் தனது சிறப்புரையில் மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் புதிய தொழில் முறை வளர்ச்சியை பின்பற்றி உலக தரத்தில் சிறந்த இடமாக மாற்ற முன்னாள் மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.

கல்லூரியின் முதல்வர் A. நவீன் சேட் அவர்கள் தனது வாழ்த்துரையில் கல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களின் ஈடுபாடு அளவற்றது. ஒரு கல்லூரி சிறந்து விளங்க வேண்டுமென்றால், முன்னாள் மாணவர்களின் பங்கு மிகவும் அவசியமானது என்றார்.விழாவில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் தங்களுடைய மாணவ பருவத்தில் ஆசிரியர்கள் வழிகாட்டல், கல்லூரி விதிமுறைகள் எங்களை சமுதாயத்தில் சான்றோராக மாற்றியதற்கு நாங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள் கல்லூரியின் வளர்ச்சியில் ஈடுபட த்திக் கொள்கிறோம் என்றனர். மேலும், மாணவ பருவத்தில் இருந்த பசுமையான கல்லூரி நினைவுகளை பகிர்ந்தனர். தற்போது பயின்று வரும் இன்றைய மாணாக்கர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களின் அவசியத்தை கற்றுக் கொண்டு தொழில்முனைவோர்களாக ஆகவேண்டும் என அறிவுரை வழங்கினார்கள் . இவ்விழாவில் 137 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு அளவற்ற மகிழ்ச்சியோடு விழாவினை சிறப்பித்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக கட்டிடவியல் துறை பேராசிரியர் இ. சந்தோஷ் குமார் அவர்கள் நன்றி உரை வழங்கினார்


Post a Comment

0 Comments