NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** ஶ்ரீ அகாடமி சார்பில் மாணவர்கள் மன அழுத்தத்தை குறைத்து லட்சியத்தை எப்படி அடைய வேண்டும் குறித்த பயிற்சி பட்டறை

ஶ்ரீ அகாடமி சார்பில் மாணவர்கள் மன அழுத்தத்தை குறைத்து லட்சியத்தை எப்படி அடைய வேண்டும் குறித்த பயிற்சி பட்டறை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள MIET கல்வி நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஐந்து பள்ளிகளின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக மாணவர்கள் எந்த துறையை எடுத்து படிக்கலாம் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு குறைத்து தனது லட்சியத்தை எப்படி அடைய வேண்டும் என்பதற்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கனவு - கவனம் - நம்பிக்கையுடன் சாதித்தல் கனவுகளைத் தொடருவது என்பது குறித்து எம் ஐ டி கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.நவீன்சேட் அவர்கள் சிரிப்பு விருந்தினராக கலந்து மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார் .


இதில் சிறப்பு பேச்சாளர்களாக ஜி.ராஜலட்சுமி தொழில் முறை மனநல மருத்துவர்,மற்றும் என்.அருண் குமார் நிறுவனர், ஸ்ரீ அகாடமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் மாணவர்களிடையே உரையாற்றிய ராஜலட்சுமி அவர்கள் மாணவர்கள் அனைவரும் டாக்டர் அப்துல் கலாம் கூறியது போல் தினமும் கனவு காண வேண்டும் கனவுகளை வெளியில் சொல்ல தயங்க கூடாது


24 மணி நேரமும் கனவு காண்பவர்கள் எல்லாம் வெற்றியாளர்களாகவே இருக்கின்றனர் அதற்கு உதாரணம் தான் டாக்டர் அப்துல் கலாம் நாம் சாதிக்க நினைப்பதை 24 மணி நேரமும் கனவு காண வேண்டும் அப்படி செய்யும் பட்சத்தில் நம் மூளையின் நரம்புகள் சுறுசுறுப்படைவதுடன் அதை நோக்கி நம்மை செயல்படுத்த வைக்கும் டிரிம் என்பது இமேஜ், ஐடியா ஸ், எமோஷன், செண்சேசன்  என அடுத்த அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆகையால் மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து தன் இலக்கை நோக்கி கனவு காணுங்கள் என்றார்.





இதன்பின் பேசிய அருண் அவர்கள் மாணவ மாணவியர்கள் பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு அடுத்தது என்ன படிப்பது எங்கு படிப்பது என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கினார் இதில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் தங்களுக்கு இது ஒரு நல்ல பயிற்சி பற்றையாக இருந்ததாகவும் நாங்கள் அடுத்த இலக்கை அடைவதற்கான தெளிவான விளக்க உரை வழங்கி எங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்ததாகவும் நாங்கள் இதை பிற மாணவர்களுக்கும் கொண்டு கொண்டு செல்ல ஊக்கப்படுத்தியதற்கு இந்த பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இதை நடத்துவதற்கு இடமளித்த MIET கல்லூரி நிர்வாகத்தினருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

Post a Comment

0 Comments