NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்....! பொதுக்குழு நடத்த தீர்மானம் நிறைவேற்றம்

மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்....! பொதுக்குழு நடத்த தீர்மானம் நிறைவேற்றம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு அவர்கள் தலைமையில், அவை தலைவர் ஷேக் தாவூத் அவர்கள் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னதாக மாவட்டத் துணைச் செயலாளர் தர்வேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.


அதன்பின் பேசிய மாவட்ட செயலாளர் பாபு  அவர்கள் கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விவாதித்தார். பின் அனைவரிடத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக கருத்துக்கள் கேட்கப்பட்டு பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி M.முஹமது ஷரிப்  கலந்துக் கொண்டு நிர்வாக சீரமைப்பின் அவசியம் மற்றும் செயல் வீரர்களின் செயல்முறை குறித்து சிறப்புரை ஆற்றினார். 




கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-

1. இன்றிலிருந்து ஒரு மாத கால அவகாசத்திற்குள் மாவட்ட பொது குழுவை எழுச்சியோடு நடத்துவது. 

2. மாவட்டம் முழுவதும் கிளை நிர்வாகம் அமைப்பது.

3. நிர்வாகத்தை சீரமைத்து புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது. 

4. இதுவரை மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்த சகோதரர் J.ஜமீர் பாஷா அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.

5. இதுவரை சிறப்பாக செயல்பட்டு வந்த அத்துனை நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் K. அப்துல் அஜீஸ் MSW அவர்கள் நன்றி உரை கூற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.



Post a Comment

0 Comments