மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசைக் கண்டித்தும், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களையவும்,மாரிஸ் ரெயில்வே மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும்,பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும்,பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கவும், திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்பாட்டம் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடலில் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குஅமைப்புச் செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசினார்.மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர், ஜெ.சீனிவாசன் முன்னிலை வகித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்ல அணுகு சாலை அமைக்கப்படவில்லை. குடிநீர் தொட்டி அமைக்கப்படவில்லை. இங்குள்ள அமைச்சர் பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என சொல்லி இருக்கிறார்.கொள்ளிடம் பழைய பாலத்தை இடித்துவிட்டு 84 கோடி செலவில் எடப்பாடியார் ஆட்சியில் புதிய பாலம் கட்டப்பட்டது.ஜங்ஷன் மேம்பாலம், சத்திரம் பஸ் நிலையம் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. சாதனைகளை சொல்ல ஒரு நாள் போதாது.
அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட ரூபாய் ஆயிரம் கோடி நிதியில்தான் இப்போது பாதாள சாக்கடை பணிகள் நடக்கிறது. சிலைகள் வைப்பதற்கு சுயநலத்துக்காகவும் இந்த பஸ் நிலையம் அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:வருகிற 7ந் தேதி கோவையிலிருந்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் எழுச்சி பயணத்தை தொடங்க இருக்கிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற போர் குரலோடு அந்த பேரணி தொடங்க இருக்கிறது.
இந்த ஆட்சியில் என்ன கோரிக்கை வைத்தாலும் அது செவிடன் காதிலேயே ஊதிய சங்காக தான் இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் குரல் கோட்டை வரை ஓங்கி ஒலிக்கும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டனின் கேள்விக்கு கூட திமுக அமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் உங்கள் எண்ணப்படி நான்கு சிலைகள் வைத்தாச்சு. திறப்பு விழா கண்டாச்சி மக்களை அன்று ஓட விட்டாச்சு. போட்டோவுக்கு போஸ் கொடுத்தாச்சு. ஆனால் பஸ்சை மட்டும் இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. எடப்பாடியார் ஆட்சி காலத்தில் விதை போட்ட இந்த பஸ் முனையத்துக்கு ரூபாய் 246 கோடி நிதி ஒதுக்கி இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.இதன் மர்மம் என்ன என்பதை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
ஒருவேளை ஆறு மாதம் கழித்து பணிகளை எல்லாம் முடித்து திறக்க வேண்டி வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடியார் திறந்து வைக்க வேண்டிய சூழல் ஏற்படுமோ என பயந்து பஸ் முனையத்தை அவசர அவசரமாக திறந்து வைத்துள்ளார்கள். திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 1,839 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த விபத்து சதவீதத்தில் நான்கு சதவீதம் திருச்சியில் நடப்பதாக சொல்கிறார்கள்.ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும்.தமிழகத்தில் திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து இன்றைக்கு 3,500 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் டாக்டர்கள் ஆகி இருக்கிறார்கள்.இன்னும் 9 அமாவாசைகளில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். எடப்பாடி யார் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் அப்போது மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்
மகளிரணி மாவட்ட நிர்வாகி நசீமா பாரிக், ஏர்போர்ட் விஜி , ரோஜர் ,கலைவாணன், வாசுதேவன், ரோஜர் மற்றும் நிர்வாகிகள், சிந்தாமணி முத்துக்குமார் இன்ஜினியர் இப்ராம்ஷா,ஜெயலலிதா பேரவை பொன்னர்,கருமண்டபம் சுரேந்தர்,இளைஞரணி சில்வர் சதீஷ்குமார், கலைப்பிரிவு உறையூர் சாதிக் அலி,என்ர்ஜி அப்துல்ரகுமான், வக்கீல்கள் முத்துமாரி,முல்லை சுரேஷ், வழக்கறிஞர் புவனேஸ்வரி , மகளிரணி ஜெயஶ்ரீ, வரகனேரி சசிகுமார்,எட்வின் ஜெயக்குமார், தினேஷ் பாபு, கங்கைமணி, சுரேஷ், ஜெயராமன்,வழக்கறிஞர்கௌசல்யாமற்றும் நிர்வாகிகள் பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், டிபன் கடை கார்த்திகேயன், பேராசிரியர் தமிழரசன்,அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, ரமணி லால், உறந்தை மணிமொழியன்,ஜெகதீசன், தர்கா காஜா சாத்தனூர் செல்வராஜ்,அப்பாகுட்டி, சரவணன், இலியாஸ், உடையான்பட்டி செல்வம்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மேலும் ஆர்ப்பாட்டத்தில்என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், விநாயக மூர்த்தி,ஒத்தக்கடை மகேந்திரன் மணிகண்டன்,குருமூர்த்தி,சரவணன்,,கே.டி.அன்புரோஸ் கேடி.ஏ ஆனந்தராஜ்,கதிர்வேல்,எடத்தெரு பாபு,கேபி. ராமநாதன், பொன். அகிலாண்டம்,ஐடி.நாகராஜ், கருமண்டபம் பெருமாள், ஜெயகுமார், ராஜ்மோகன், சிந்தமாணி மகாதேவன், ஈஸ்வரன்,தென்னூர் ஷாஜகான்,கிராப்பட்டி கமலஹாசன் எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,வசந்தம் செல்வமணி, கயிலை கோபி, செல்லப்பன், மணிகண்டன்,பாலசுப்பிரமணியன் கல்லுக்குழி, அக்பர்அலி, ரமணிலால், கீழக்கரை முஸ்தபா, கோழிக்கடை பாலு, சாத்தனூர் சதிஷ், வாழைக்காய் மண்டி சுரேஷ், கல்லுக்குழி முருகன், குருமூர்த்தி, முகமது யூசுப், சண்முகம், காசிப்பாளையம் சுரேஷ்குமார், என்டி.மலையப்பன், பூக்கடை முத்துகுமார்,புத்தூர் பாலு,டைமன் தாமோதரன்உறந்தை மணிமொழியன், ராமலிங்கம், ரபீக் உள்ளிட்டஅதிமுக தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.
0 Comments