// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** தமுமுகவின் 31 ம் ஆண்டு தொடக்க விழா கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை அப்துல் சமது MLA வழங்கினார்.

தமுமுகவின் 31 ம் ஆண்டு தொடக்க விழா கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை அப்துல் சமது MLA வழங்கினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் தென்னூர் மேம்பாலம் அருகில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC தலைமையில் நடைபெற்றது.தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மமக பொது செயலாளர் அப்துல் சமது MLA அவர்கள் தமுமுக வின் கருப்பு வெள்ளை கொடியை ஏற்றி வைத்து எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில்   இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணைச் செயலாளர் முகமது ரபீக், IT WING மாநில துணைச் செயலாளர் நஜிர் , சமூக நீதி மாணவர் இயக்க மாநில துணைச் செயலாளர் அப்பீஸதீன்,

தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் சமது , அசாருதீன் , இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முபாரக் அலி, விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் ரஜாக், மாவட்ட பொருளாளர் இசாக், IPP மாவட்ட  பொருளாளர்  சிராஜ்தீன் ,  மருத்துவ சேவை அணி மாவட்ட துணைச் செயலாளர் இலியாஸ்,IT WING மாவட்ட பொருளாளர்   உஸ்மான்,

அண்ணா நகர் பகுதி தலைவர் நாசர், தமுமுக செயலாளர் காஜா, மமக செயலாளர்  சதாம் உசேன் , பொருளாளர் ஜாபர்,உறையூர் பகுதி தலைவர் ஆரிப், கிளை நிர்வாகிகள் அப்பாஸ், அப்துல்லாஹ், இர்ஃபான், ஷாபில், ஆரிப், ரியாஸ்,  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments