உலக வரலாற்றில் முதன்முறையாக மலேசியாவில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவது தொடர்பாக திருச்சியில் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மலேசிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன், இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநிலத்தலைவர் ஒண்டிராஜ் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல் போட்டி, இலங்கையைத் தொடர்ந்து முதன் முறையாக மலேசியாவில் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
வருகிற நவம்பர் மாதம், மலேசியா பத்துமலை திருக்கோவில் வளாகத்தில் நடத்தப்போவதாகவும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுவருவதுடன், உச்ச நீதிமன்ற பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிய மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உள்ளதாகவும் அதே நேரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அனுமதி கோரி உள்ளதாகவும் மலேசியா கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 250 காளைகள் பங்கேற்க உள்ளதாகவும், மலேசியாவில் தங்கி பணியாற்றிவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்தும் பெரும்பாலான மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.
0 Comments