// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் இல்ல திருமண விழா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் இல்ல திருமண விழா

 திருச்சி மாநகர மாவட்ட தேமுதிக செயலாளர் டி.வி. கணேஷ் - நளினி தேவி தம்பதியரின் மகனுக்கும்  அகிலா இளங்கோவன் தம்பதியரின் மகளுக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று தேமுதிக மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த  நிகழ்வில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் மணமக்கள் லட்சுமண குமார் யுவாசினி ஆகியோரை வாழ்த்தி ஆசீர்வதித்தார். 

மேலும் தேமுதிக கட்சியின் பொருளாளர் எல்.கே சுதீஷ், திருச்சி மாநகர மாவட்ட மாநில தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் ஜெ. ஐயப்பன் மற்றும் கட்சியின் தலைமை பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் க பொறுப்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

Post a Comment

0 Comments