// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்த்துறை தலைவர் பண்டித கோபால கிருஷ்ணன் ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவு

திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்த்துறை தலைவர் பண்டித கோபால கிருஷ்ணன் ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவு

 திருச்சி தேசியக் கல்லூரியின் முதல் தமிழ்த்துறைத்தலைவர் பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் D. முத்துராமகிருஷ்ணன் தன் தலைமை உரையில் மாணவர்கள் இது போன்ற அறக்கட்டளைச் சொற்பொழிவுகளைக் கேட்டுப் பின்பற்றி வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

மதுரை பேராசிரியர் முனைவர் சொ.சொ. மீ. சுந்தரம் அவர்கள் "எல்லாப் பொருளும் இவர் பால் உள "எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார். பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர் அவர்கள் ஆசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், என எல்லாத் தளங்களிலும், துறையிலும் இலக்கியப் பணி மேற்கொண்டவர். உ வே சாமிநாத ஐயர், ஜி சுப்பிரமணிய ஐயர், மகாகவி பாரதியார், விவேகானந்தர் போன்ற சான்றோர் பெருமக்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களால் பாராட்ட பெற்ற இலக்கியப் புலமை மிக்கவர் பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர் என்று தம் சிறப்புரையில் எடுத்துரைத்தார். விழாவில் கோபாலகிருஷ்ண ஐயர் அவர்களின் பெயர்த்தி முனைவர் உஷா மகாதேவன், கவிஞர் சிவ சூரியநாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திரு சுந்தரராஜன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். முன்னதாகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சி. காந்தி வரவேற்புரை வழங்கினார் .

 சொற்பொழிவைத் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் மற்றும் கலைப்புல முதன்மையர் முனைவர் சா. நீலகண்டன் ஒருங்கிணைத்து நன்றி கூறினார். பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments