தஞ்சாவூர் மாவட்டம் பழைய பட்டி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த வால்டர் என்பவர் தனது நிலம் விற்பனை செய்தது தொடர்பாக, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
நான் வெளிநாடு செல்வதற்காக எனக்கு சொந்தமான நிலத்தை வடிவழகன் என்பவரிடம் விற்பனை செய்து 8 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டேன். அதன் பின்னர் லால்குடி தாலுக்கா செம்பரை கிராமத்தை சேர்ந்த மதிவாணன், சேகர் மற்றும் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 11 நபர்கள், தன்னை வற்புறுத்தி தான் விற்பனை செய்த இடத்தை விற்பனை செய்யவில்லை என கூறினால், சிவில் வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும், இடத்தை மீட்டு கூடுதல் பணம் பெறலாம் ஆசை வார்த்தை கூறி, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் மாவட்ட பதிவுத்துறை சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எனது பெயரை பயன்படுத்தி புகார் மனு அளித்துள்ளனர்.
அவர்கள் மூலமாக எனது பெயரில் கொடுத்த மனுக்கள் எதிலும் உண்மை இல்லை. எனக்கும் அந்தப் புகார் மனுக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அனைத்து மனுக்களும் என்னை கட்டாயப்படுத்தி என் பெயரை வைத்து கொடுத்து உள்ளனர். வடிவழகன் என்பவரிடம் எனது இடத்தை விற்பனை செய்து 8 லட்சம் ரூபாய் பணம் ரொக்கமாக பெற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.





0 Comments