// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் கடை வைப்பதில் தகராறு முதியவரைக் கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

திருச்சியில் கடை வைப்பதில் தகராறு முதியவரைக் கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

  திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம் குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது இந்த கோவில் அருகே கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளாதேவி என்பவரும் வன்னியாயி மற்றும் செந்தமிழ் செல்வி ஆகியோரும் அகல்விளக்கு கடை வைத்துள்ளனர்.

இவர்களுக்கு இடையே விளக்கு கடை அமைப்பது கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி தகராறு ஏற்பட்டது இது தொடர்பாக மஞ்சுளாதேவி மகன் அருண் பிரசாத் வயது 33 தரப்புக்கும் வன்னியாயி  55 உறவினரான மணிமாறன் என்பவருக்கும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி பகலில் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் இதில் அருண் பிரசாத்தின் தந்தை ராஜேந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் இதனால் அருண் பிரசாத் வன்னியாயி குடும்பத்தினரின் மேல் ஆத்திரத்தில் இருந்தார் நிகழ்ச்சி அன்று இரவு வன்னியாயி வீட்டுக்கு அருண் பிரசாத் மற்றும் அவரது தாயார் மஞ்சுளாதேவி ஆகியோர் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது அருண்பிரசாத் தன் கையில் வைத்திருந்த  அறிவாளால் வன்னியாயி கணவர் தனபாலை (60) வெட்டினார் இதில் தனபால் சம்பவ இடத்திலேயே

இறந்தார் இது குறித்து வன்னியாயி போலீசாரிடம்  கொடுத்த புகாரின் பேரில் அருள்பிரசாத் மற்றும் அவரது தாய் மஞ்சுளாதேவி ஆகியோர் மீது திருச்சி கோட்டை போலீஸார் கொலை வழக்காக  பதிவு செய்து அவர்களை கைது செய்தனர் இந்த வழக்கானது   திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார் வழக்கை  விசாரித்த நீதிபதி கோபிநாத் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட அருண்பிரசாத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 2000  அபராதமும் அவரது தாயார் மஞ்சுளா தேவிக்கு ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அருண்பிரசாத்துக்கு  இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Post a Comment

0 Comments