// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** கரூரில் நடைபெற்ற கோர சம்பவத்திற்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் ஆறுதல் : விஜய்யை கைது செய்யவும் கோரிக்கை

கரூரில் நடைபெற்ற கோர சம்பவத்திற்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் ஆறுதல் : விஜய்யை கைது செய்யவும் கோரிக்கை

கரூரில் நடைபெற்ற கோர சம்பவத்திற்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பாதித்த மக்களுக்கு ஆறுதலும், விஜய்யை கைது செய்யவும் கோரிக்கை விடுத்தும் அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், நாடு முழுவதும் கவலையளிக்ககூடிய சம்பவமாக கரூர் மாவட்டத்தில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய் கலந்துக்கொண்ட பிராச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 40 நபர்கள் உயிரிழந்ததாக வரக்கூடிய செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்திருக்கிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு மன அமைதி ஏற்பட இறைவனிடம் பிரார்த்திப்பதோடு, இப்படிப்பட்ட முறையற்ற மற்றும் நிபந்தனைகளை மீறி நடந்துக் கொண்ட தொண்டர்களை கட்டுப்படுத்த விஜய் தவறியதையும் மேலும் தாமதமாக வந்து பிராச்சாரம் செய்து இந்த முழு சம்பவத்திற்கும் முழு பொறுப்பாகிய நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் க்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு முட்டாள்தனமான முறையற்ற பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து விஜய் அவர்களை தாமதமின்றி கைது செய்து நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக காவல் துறைக்கும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டுமென்று யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments