// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் நண்பர்கள் சிலம்பக் கூடத்தின் சார்பில் சிலம்பம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் மரகன்றுகள் வழங்கி ஆயுத பூஜை விழா

திருச்சியில் நண்பர்கள் சிலம்பக் கூடத்தின் சார்பில் சிலம்பம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் மரகன்றுகள் வழங்கி ஆயுத பூஜை விழா

 திருச்சியில்  நண்பர்கள் சிலம்பக் கூடத்தின் சார்பில் சிலம்பம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் மரகன்றுகள் வழங்கி ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சி காந்தி மார்கெட் இ. பி. ரோடு பகுதியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் G. N. சண்முகசுந்தரம் ஆசான் செயலாளர் யுவராஜ்  அகியோர் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை  பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள் ஆயுத பூஜை விழாவை கொண்டாடும் வகையில்    பாரம்பரிய கலைகளான  சிலம்பம் கம்பு வாள் கேடயம் மான் கொம்பு ஈட்டி சுருள் வாள்  சக்கரப்போத்து நட்சத்திர போத்து செடி குஞ்சு சக்கை உள்ளிட்ட கலைகளை பயிற்சி எடுத்து வரும் மாணவ மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில்  பழ வகையிலான மரகன்றுகள் வழங்கி  ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.




இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 ன் தலைவர் மு. மதிவாணன்  தேசிய மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஆர். ஏ. தாமஸ் தடகள விளையாட்டு பயிற்சியாளர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கொய்யா நெல்லி எலிம்பிச்சை சீதா உள்ளிட்ட பழ வகையிலான மரகன்றுகளை வழங்கினர்‌



இந்த நிகழ்வில் கலை சுடர் மணி சிலம்ப ஆசான் ஜெயக்குமார் பேராசிரியர் ரெங்கநாதன் சிலம்ப பயிற்ச்சியாளர்கள் சேஷாத்ரி கீர்த்திஹரன் வைஷ்ணவி மற்றும் திரளான மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments