திருச்சி ஸ்ரீரங்கம் கீழச்சித்திர வீதியில் 61ஆம் ஆண்டாக திருவோண மஹோத்ஸ நிகழ்ச்சி ஸ்ரீனிவாசபக்தகோடிகள் அமைப்பின் சார்பில் கடந்த 4ம்தேதி முதல் துவங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்று சாரா விஜயராகவன் புல்லாங்குழல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகாலட்சுமி வயலின், மிருதங்கத்தை கிரிதர சீனிவாசன் ஆகியோர் வாசித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இசையை ரசித்தனர்.
இந்த இடமும் துவராக மூலையில் வந்து உட்கார்ந்து நிகழ்ச்சி நடத்துகின்ற எந்த வித்வானாக இருந்தாலும் அவர்கள் சிகரத்தை தொடுகிறார்கள் என்பது அனுபவபூர்வமாக உண்மை.இந்த 61ஆம் ஆண்டு நிகழ்வில் புல்லாங்குழல் சாராவிஜயராகவன் புல்லாங்குழல் என்றார்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மோகன் கூறுகையில்...இன்று புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் சாரதா விஜயராகவன் மூன்று தலைமுறையாக இசையில் வளர்ந்து வருகின்றனர்.இவருடைய தாத்தா சடகோபன் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர் வீணை வாசிப்பார். இந்த நிகழ்வு கடந்த மூன்று தலைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
0 Comments