// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் இரண்டு புதிய "கிரேட் ஸ்லீப் ஸ்டோர்" ஷோரூம்களைத் தொடங்கியிருக்கும் பெப்ஸ்

திருச்சியில் இரண்டு புதிய "கிரேட் ஸ்லீப் ஸ்டோர்" ஷோரூம்களைத் தொடங்கியிருக்கும் பெப்ஸ்

ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் உறக்கத் தீர்வுகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி பிராண்டான பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தமிழ்நாட்டில் தனது செயலிருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியில் தில்லை நகர் (மேற்கு விரிவு) மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு முக்கிய இடங்களில் தனது புதிய, பிரத்யேக ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்களை’ பெப்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே உலகத்தரம் வாய்ந்த, புதுமையான மெத்தைகள், தலையணைகள் மற்றும் உறக்கத்திற்குத் தேவையான அனைத்துத் தீர்வுகளையும் கிடைக்கச் செய்வதே பெப்ஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த புதிய விற்பனையகங்களின் திறப்பு விழா அந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கிய மைல் கல்லாகும்.


இந்த புதிய ஷோரூம்கள் திறப்பு விழாவில் பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் ஜி.சங்கர் ராம் கலந்து கொண்டு, இரண்டு புதிய ஷோரூம்களையும் திறந்து வைத்தார்.


அதனை தொடர்ந்து அவர் பேசுகையில்,....“புதுமையான தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு மூலம் இந்தியர்களுக்கு சிறந்த உறக்கத்தை வழங்குவதே பெப்ஸ் நிறுவனத்தின் தாரக மந்திரம். திருச்சியில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்கள்’ மூலம், தமிழ்நாட்டில் இன்னும் பல குடும்பங்களுக்கு உலகத் தரமான உறக்க அனுபவத்தை நாங்கள் கொண்டு சேர்க்கிறோம். 

தமிழ்நாடு எங்களின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்று. இங்குள்ள வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வசதியையும் தரமான சேவையையும் வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார். 


மெய்மறக்கச் செய்யும் ‘உறக்க அனுபவ மையங்களாக’ வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த ஷோரூம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள், இங்கு பெப்ஸ் பிராண்டின் அனைத்துத் தயாரிப்புகளையும் நேரில் பார்த்து, தொட்டு உணர்ந்து, தங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்யலாம்.


இங்கு ஸ்பிரிங், ஃபோம் மற்றும் காயர் மெத்தைகள், பிரீமியம் தலையணைகள், மெத்தை பாதுகாப்பு உறைகள் மற்றும் படுக்கையறை சார்ந்த இதர பொருட்கள் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

வாடிக்கையாளர்களின் சௌகரியம் மற்றும் நவீன வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு, பெப்ஸ் கம்ஃபர்ட், பெப்ஸ் சுப்ரீம், பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம், பெப்ஸ் சுபீரியர் ஸ்பிரிங் என்ற பெயர்களில் நான்கு மேம்படுத்தப்பட்ட தயாரிப்புத் தொகுப்புகளை பெப்ஸ் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஒவ்வொன்றும் மிகச்சிறந்த உடல் ஆதரவு, சொகுசு மற்றும் நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 1300 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒவ்வொரு ஷோரூமும், வாடிக்கையாளர்கள் பெப்ஸ் தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து, தங்களது தேவைகளுக்கு உகந்தவற்றை தேர்ந்தெடுக்க சரியான முடிவை எடுக்க உதவும் வகையில் ஓர் ‘இன்டராக்டிவ்’ சூழலை வழங்குகிறது.

தற்போது இந்தியா முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மல்டி-பிராண்டு விற்பனையகங்கள் மற்றும் 90 பிரத்யேக ஸ்டோர்கள் மூலம் பெப்ஸ் தனது சேவையை வழங்கி வருகிறது. 2026-ஆம் ஆண்டிற்குள் முக்கிய நகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் சிறுநகரங்களிலும் தனது பிரத்யேக ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ கிளைகளை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments