திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா மஞ்சப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க தங்கராஜ் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தவரை உயிர் காக்க பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து முதலுதவி சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இறந்த நபர் குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரிக்கையில்,இறந்த நபர் நாற்பது வருடங்களுக்கு முன்பே உற்றார் உறவினரை பிரிந்து சென்று விட்டார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறப்புக்கு கூட சொந்த ஊருக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. மேற்படி நபர் உடலை யாரும் உரிமைக் கோரவில்லை. இறந்த நபர் உடல் கூராய்வு செய்யப்பட்ட நிலையில் நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு துவரங்குறிச்சி இரண்டாம் நிலை காவலர் செல்வேந்திரன் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி குழுமிக் கரை மயானத்தில் துவரங்குறிச்சி இரண்டாம் நிலை காவலர் செல்வேந்திரன் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

0 Comments