// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சியில் "பிரே" குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டு சிறப்பித்தார்

திருச்சியில் "பிரே" குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டு சிறப்பித்தார்

திருச்சியில் ஸ்டார்ட் கேமிரா ஆக்ஷன் மூவி புரோடெக்சன்ஸ் தயாரிப்பில் திருச்சியை சேர்ந்த குறும்பட இயக்குனர்கள்  சஞ்சய் மற்றும் சரண் ஆகியோரின்  இயக்கத்தில் உருவாகி வருகின்ற பிரே (pray prey) திரில்லர் குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ்நாடு வணிகர்கள் சங்ககளின் பேரமைப்பு  மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டு சிறப்பித்தார்.



அதனை தொடர்ந்து படக்குவினருக்கு  தனது பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இந்நிகழ்வில் டோல்கேட் ரமேஷ் மற்றும்   இந்த குறும்படத்தின் இயக்குனர்கள் சஞ்சய் மற்றும் சரண் ஒளிப்பதிவாளர் விக்கி எஸ்.ஜெய் இசையமைப்பாளர் நேதாஜி சுபாஷ் கலை இயக்குனர் ஆர்டிஸ்ட் ஜெயக்குமார் படதெகுப்பாளர் பரணி குமார் நடிகர்கள் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவருமான ஆர். ஏ. தாமஸ் ,கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 


இந்த குறும்படம் திரில்லர் கதை களத்தை கொண்ட படமாக உருவாகிறது இந்த குறும்நடத்தில் திருச்சி மாவட்டத்தை  சேர்ந்த நடிகர்கள்  தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சி மாவட்டத்தில் இருந்து  பல்வேறு திறமையானவர்களை வைத்து பல புதிய மாறுபட்ட படைப்புகளை உருவாக்கும் முயற்சிகளில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் விரைவில் இக்குறும்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று படம் வெளிவரவுள்ளது

Post a Comment

0 Comments