கிறிஸ்துமஸ் விழா திருச்சியில் உள்ள அருவி முதியோர் இல்லத்தில் கன்மலை அறக்கட்டளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்றார் .அவரை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் பூங்கொத்துகளை கொடுத்து வரவேற்றனர் .
அங்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, மஜக சார்பில் தயார் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி எல்லோருக்கும் வழங்கினார்.
மேலும் அருவி முதியோர் இல்லத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக அறையையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் தஞ்சை அகமது கபீர், மாநில துணைச்செயலாளர் ஆத்தூர் ரஹ்மான், இளைஞரணி மாநில செயலாளர் திருச்சி ஷெரீப், இளைஞர் அணி மாநில பொருளாளர் இம்ரான், மாவட்ட பொருளாளர் ஜமீர் பாஷா, மாவட்ட துணைசெயலாளர்கள் தர்வேஷ் யாசர் ஷரீப், அப்துல் அஜீஸ், ரியாஸ், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.








0 Comments