திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம்குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி, வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம் குறித்து திருச்சி வரலாற்று அலுவலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் பேசுகையில்...
தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சிராப்பள்ளி மாநகரின் மத்தியில், முதன்மை நுழைவாயில் என்ற மெயின்கார்டு கேட் பகுதி அருகே புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் உள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னதெத் சூபிரூஸ் ( Bernadette Soubirous ) என்ற சிறுமி தனது சகோதரி மற்றும் தோழியுடன் அருகில் உள்ள காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்றார்கள். அப்போது மசபியேல் என்ற கெபி குகை அருகே சென்றபோது அன்னை மேரி காட்சி தந்தார். இந்த காட்சியானது பெர்னதெத்திற்கு தெரிந்தது. அதன் பிறகு தொடர்ந்து சில நாட்கள் அன்னை மேரி அந்த சிறுமியை அந்த இடத்திற்கு வரச் சொன்னார். அங்கு தனக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று அன்னை மேரி சொல்கிறார். ஒருதடவை அன்னை மேரியின் கட்டளையை ஏற்று அந்த இடத்தில் பெர்னதெத் மண்ணைத் தோண்டுகையில் ஓர் நீருற்று உண்டானது. பின்னர் அது ஒரு ஓடையாக மாறிவிட்டது. இந்த அற்புதத்தைக் கேட்ட திருச்சபையினர் உண்மையைக் கண்டறிய விசாரணை செய்தனர். முடிவில் அங்கு பெர்னதெத் என்ற சிறுமிக்கு அன்னை மேரி காட்சி அளித்து அற்புதம் நிகழ்த்தியது உண்மை என்று அறிவித்தனர். அதன் பிறகு மசபியேல் என்ற குகை அருகே ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அந்த ஓடைநீர் புனித நீராக கருதப்பட்டது. ஆலயம் அமைந்த இடம் லூர்து நகர் என்று அழைக்கப்பட்டது. அன்னை மேரி சிறுமிக்கு முதன் முதல் காட்சி அளித்த நாள் 11 பிப்ரவரி 1858 ஆகும். ஆண்டுதோறும் இந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
1890 இல் தொடங்கப்பட்ட தேவாலய பணியானது 1898- ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிரதான கோபுரவேலை மட்டும் நான்கு ஆண்டுகள் தடைபட்டு, பின்னர் 1903 – ஜனவரி தொடங்கி 1910- டிசம்பரில் முடிந்தது.தேவாலயத்தின் உள்ளே நுழையும் போது பிரரம்மாண்டமான வாயில் விசாலமான அமைப்பு. அண்ணாந்து பார்க்க வைக்கும் மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். கண்ணாடி ஓவியங்கள் பிரம்மிக்க வைக்கின்றன ஆலயத்தின் நூற்றாண்டு விழா (1896 –1998) நடந்தது. வழிபாட்டு நேரமானது வார நாட்களில் காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மாலை 6.30 மணியளவிலும் ஞாயிறு காலை: 5.15 மணியிலிருந்து 6.15 மற்றும் 7.30 மணி வரையிலும் மாலை 6.30 மணியளவிலும் நடைப்பெறும் என்றார்.


0 Comments