மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை அமல்படுத்தி இருப்பதற்கு யார் ஆதரவு அளித்தாலும் அவர்கள் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள் தான். அதில் எந்த பாகுபாடும் கிடையாது - துரை வைகோ பேட்டி
இந்தியாவில் ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்காக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி அந்த திட்டத்தை முழுமையாக அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். திருச்சி எம்.பி துரை வைகோ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதில் பேசிய அவர்,
கிராமப்புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியின ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த திட்டம் 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது.
கொரோனா காலத்தில் ஏழைகளின் சுவாச காற்றாக இந்த திட்டம் விளங்கியது.
இது வறுமை ஒழிப்பு திட்டம், சமத்துவமின்மை ஒழிக்கும் திட்டம் என அறிஞர்கள் பலர் புகழ்ந்துள்ளனர்.
இந்த திட்டத்தின் நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்து கொண்டே வந்து தற்போது அதை இல்லாமல் செய்யும் நிலையை உருவாக்கி உள்ளார்கள்.
நூறு நாள் இருந்த போதே 50 நாள் கூட வேலை வழங்காமல் இருந்து தற்போது 125 நாள் வேலை வழங்கப்போவதாக பொய்யான வாக்குறுதியை வழங்கி உள்ளார்கள்.

தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே நிதி ஒதுக்காமல் இருந்து வரும் ஒன்றிய அரசு தற்போது புதிய திட்டத்தில் மத்திய அரசின் மீது நிதி சுமையை ஏற்படுத்தப்பார்கிறார்கள்.
கோட்ஷே பெயரை கேட்டால் பா.ஜ.க வினருக்கு இனிக்கும் ஆனால் காந்தி பெயரை கேட்டால் கசக்கதான் செய்யும்
தமிழ்நாட்டிற்கு தேவை வளர்ச்சி அரசியல் தானே தவிர வன்முறை அரசியல் அல்ல
சமாதான அரசியல் தானே தவிர சனாதான அரசியல் அல்ல.
மக்களுக்கு வளர்ச்சி திட்டங்களை தான் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எம்.பி துரை வைகோ...
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி இருப்பதற்கு யார் ஆதரவு அளித்தாலும் அவர்கள் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள் தான். அதில் எந்த பாகுபாடும் கிடையாது.
விபிஜிராம்ஜி திட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது அதை நடைமுறை படுத்தும் பொழுது பல்வேறு சிக்கல்கள் வரும். ஒரு கட்டத்தில் முழுமையாக இந்தத் திட்டத்தையும் ஒன்றிய அரசு நிறுத்தி விடுவார்கள். அந்த நோக்கில் தான் இதனை நிறைவேற்றியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால் திமுக கூட்டணி ஐந்தாண்டுகள் தமிழக மக்களுக்கு செய்துள்ள திட்டங்களை வைத்து மக்களிடம் வாக்கு சேகரிப்போம். எதிர்க்கட்சி கூட்டணி குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றார்
செய்தியாளர் : ரோகித்

0 Comments