// NEWS UPDATE *** சென்னை கோட்டை ரயில்நிலையம் அருகே 30 ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் *** சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு வாஸன் கண் மருத்துவமனையில் 1000 ஓட்டுநர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை.

சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு வாஸன் கண் மருத்துவமனையில் 1000 ஓட்டுநர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை.

இந்தியா முழுவதும் உள்ள வாஸன் கண் மருத்துவமனையில் சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது .

இதன் ஒரு பகுதியாக திருச்சி, அண்ணாமலைநகர் பகுதியில் அமைந்துள்ள வாஸன் கண் மருத்துவமனை கிளையில் தலைமை மருத்துவ அதிகாரி பிரவீன் அந்தராஜ் ,மாநகர காவல் உதவி ஆணையர், மணிமாறன் கலந்துகொண்டு இலவச முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.


வர்த்தக பொது மேலாளர் விஜயன்  பேசுகையில் :-இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 11 முதல் பிப்ரவரி 11 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வணிக ஓட்டுநர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாஸன் கண் மருத்துவமனை சிறப்பான முன்னெடுப்பை எடுத்துள்ளது அது என்னவென்றால், சுமார் ஆயிரம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படவுள்ளது என்றார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து வணிக ஓட்டுநர்களும் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.



மேலும் ஓட்டுனர்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிச்சயமாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், கண் கண்ணாடிகள் சரியாக பரிசோதனை செய்து அணிய வேண்டும் என்றார்.முன்பு எல்லாம் கண்புரை 60 வயதிற்கு மேல் தான் ஏற்படும் ஆனால் சமீபத்திய காலங்களில் 45 வயதிலிருந்தே கண் புரை ஏற்படுகிறது. எனவே கண்புரையை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்வின் போது அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர் மேரி இவாஞ்ஜில், ஆனந்த் பாலஷாகிப் டெம்கர், பொது கண் மருத்துவர் வசுமதி விஜய்,  ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments