நமது இந்திய திருநாட்டில் ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகளால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுகிறது இதனை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் 01.01.2026 முதல் 31.01.2026 வரை ஒரு மாத கால சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்சியில் பொதுமக்கள் மாணவ மாணவிகள் மத்தியில் கொண்டு சென்று அவர்கள் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் விதத்தில் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படது.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் ரா. கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு திருச்சி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சதீஷ் குமார் அவர்கள் துண்டறிக்கை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஆர்.ஏ.தாமஸ் சாக்ஸிடு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சசி மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட செயலாளர் Dr .கார்த்திக், மற்றும் போக்குவரத்து வணிகப் பிரிவு திருச்சி மண்டல உதவி மேலாளர் சுரேஷ் குமார் ,உதவி மேலாளர் சேகர் (KKBT) உதவி பொறியாளர் சக்தி, திரு சரவண பாபு ஆகியோர் பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் பொதுமக்களுக்கு, சாலை பாதுகாப்பு விதிகள், விதி மீறுதல்களால் ஏற்படும் விளைவுகள், பற்றியும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அறிவுரை வாக்குறுதிகள் அடங்கிய கை பிரிதிகள் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்





0 Comments