// NEWS UPDATE *** சென்னை கோட்டை ரயில்நிலையம் அருகே 30 ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் *** கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து திருச்சியில் இலவச மருத்துவ முகாம்

கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து திருச்சியில் இலவச மருத்துவ முகாம்

கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து திருச்சியில் இலவச மருத்துவ முகாம் இந்த மருத்துவ முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் .

மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணர்கள் கல்லீரல், நுரையீரல், இதயம்,எலும்பு மஜ்ஜை பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கினர்


2026- போர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் அங்கமான சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை, ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து இன்று திருச்சியில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இந்த முகாமில் கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும் எலும்பு மஜ்ஜை தொடர்பான நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். 

இந்த மருத்துவ முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இதில் சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களான கல்லீரல் துறை இயக்குனர் டாக்டர் ஜாய் வர்கீஸ், இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குனர் டாக்டர் கோவினி பாலசுப்ரமணி, புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை நிபுணர் டாக்டர் பொன்னி சிவப்பிரகாசம், நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் சிந்துரா, கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் கதிரேசன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். மேலும், சென்னை க்ளெனீகல்ஸ் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து குணமடைந்த திருச்சியைச் சேர்ந்த நோயாளிகளையும் அமைச்சர் நேரில் சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், நிபுணர்களின் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆரம்பக்கட்ட நோய் கண்டறிதல் மூலம் பயனடைந்தனர். பல நேரங்களில் முற்றிய நிலையில் கண்டறியப்படும் நாள்பட்ட மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களால் பலர் அவதிப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இந்த மருத்துவ முகாமை கிளெனீகல்ஸ் மருத்துவமனை நடத்தியது.

இந்த முகாமில்  கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் சுருக்கம் உள்ளிட்ட கல்லீரல் தொடர்பான நோய்கள், இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள், எலும்பு மஜ்ஜை மற்றும் ரத்தம் தொடர்பான நோய்கள் குறித்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, நோயாளிகளுக்குப் பல மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாகவும், சில பரிசோதனைகள் சலுகை கட்டணத்திலும் வழங்கப்பட்டன:ஈசிஜி, எக்கோ மற்றும் நுரையீரல் செயல்பாட்டுப் பரிசோதனைகள், கல்லீரலின் ஆரோக்கியத்தைத் துல்லியமாக அறிய பைப்ரோஸ்கேன் பரிசோதனை. எச்.எல்.ஏ டைப்பிங்  பரிசோதனை உள்ளிட்டவை சலுகை கட்டணத்தில் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சைத் துறை இயக்குனர் டாக்டர் ஜாய் வர்கீஸ் கூறுகையில், பெரும்பாலான கல்லீரல் நோய்களால் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. அவை முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இந்த முகாமின் மூலம், கல்லீரல் நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் பெரிய உடல்நல பாதிப்புகளையும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவையையும் வெகுவாக குறைக்க முடியும் என்று தெரிவித்தார்.

நோய் வரும் முன் கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தி இம்மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை இயக்குனர் டாக்டர் கோவினி பாலசுப்ரமணி கூறுகையில், இப்போதெல்லாம் இளம் வயதினருக்கும் இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகமாக வருகின்றன. நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதிலும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் மிக முக்கியமாகும். உயர்தர மருத்துவ சிகிச்சைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த மருத்துவ முகாமை கிளெனீகல்ஸ் நடத்தி உள்ளது என்றார்.

புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை நிபுணர் டாக்டர் பொன்னி சிவப்பிரகாசம் கூறுகையில், இந்த இலவச முகாமின் மூலம் பொதுமக்கள் ஆரம்பக்கட்ட மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில், சரியான நேரத்தில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கையே, ஒருவரை நாள்பட்ட நோயிலிருந்து காப்பாற்றி, ஆரோக்கியமான வாழ்க்கையைத் தரும் என்றார்.


மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி எஸ். நிரஞ்சனி கூறுகையில், திருச்சி போன்ற வளர்ந்து வரும் நகரங்களில்  வசிக்கும் மக்களிடம், நோயைத் தடுப்பது மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் எங்கள் மருத்துவமனை உறுதியாக உள்ளது. இந்த முகாமின் மாபெரும் வெற்றியே அதற்குச் சான்றாகும் என்றார்.


மேல் சிகிச்சை அல்லது கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தகுதியுள்ளவர்களுக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் சிகிச்சை பெறுவது குறித்த விவரங்களும் இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன.

Post a Comment

0 Comments