மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மகாத்மா பெயரிலேயே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி காங்கிரசர் திருச்சியில் பேரணி நடைபெற உள்ளது - திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் பேட்டி
திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
ஒரு மாதம் முன்பு மத்திய அரசு சட்டத்தின் பெயரை ராம்.ஜீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன் 40%சதவிகித மாநில அரசு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர்.இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.
மகாத்மா காந்தி பெயரில் மீண்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி சென்னையில் இன்று பாதையாத்திரை நடைபெறுகிறது.இதில் தமிழக பொறுப்பாளர் வேணுகோபால், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தொகை ஆகியோர் பங்கேற்கின்றனர்.இதன் தொடர்ச்சியாக வரும் 7ம்தேதி சனிக்கிழமை திருச்சி மெயின்கார்டுகேட்டில் உள்ள மகாத்மாசிலை முன்பு பாதயாத்திரை துவங்கி சிங்காரத்தோப்பு வழியாக காந்தி மார்க்கட் வரை சென்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்த பாதை யாத்திரையில் திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கு பெறுகின்றனர்.இந்த கண்டன போராட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் கிரிஷ் கோயங்கி, முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என தெரிவித்தார்.இந்த பேட்டியின் போது தலைவர்கள் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகிய உடன் இருந்தனர்.





0 Comments