// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேர்தல் அறிக்கை வெளியீடு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் காண தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மாநிலத் தலைவர் முகமது ஹனிபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

ஒழுக்கத்தில் , நீதியில், சம சீரான வளர்ச்சியில், சுகாதாரத்தில் சிறந்த தமிழ்நாடு விளங்க புதிதாக பொறுப்பேற்கும் அரசு விளங்க வேண்டும். மேலும் ஊழல், மது போதை இல்லாத அரசாக இருக்க வேண்டும்.


மின் கட்டணத்தை  மாதந்தோறும் வசூலிக்கின்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும் ஏழை எளிய நடுத்தர மக்களின் மீதான கட்டண சுமைகளை குறைக்க வேண்டும் ஊழலை ஒழிப்பதற்காக. கொண்டு வரப்பட்ட லோக் ஆயுத்தா அமைப்பின் செயல்பாடுகளை முடக்கி விட வேண்டும். 


ஊழல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூரை போன்ற சுதந்திர மான நிறுவனம் அமைக்க வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போக செய்து விட்ட நிலையில் அதற்கு மாற்றாக தமிழ்நாடு அரசு தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 

திருச்சியில் இருக்கின்ற ஐ எம் கல்வி நிறுவனம் போன்று கூடுதலாக மற்றொரு நிறுவன தொடங்க வேண்டும்.சென்னையிலும் மதுரையிலும் நிறுவப்பட்டு உள்ள நூலகம் போல மாவட்டம் தோறும் சிறந்த நூலகங்களை உருவாக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது திருச்சி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான்,நிர்வாகிகள் நாசர்,கமால், அப்துல் சலாம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தார்.

Post a Comment

0 Comments