// NEWS UPDATE *** "விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். ஓட்டு போடும் நாளில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் விஜய்யும் வெளியே வந்து ஓட்டு போடுவார்கள். அன்றைக்கு தெரியும்.. விஜய்யை ஏன் வெளியே அழைத்தோம் என்று" -தவெக ஆண்டுவிழாவில் விஜய் *** திருச்சியில் பா.ஜ.க கட்சி சார்பில் ஸ்ரீரங்கத்தில் "புரொபஷனல் கனெக்ட்" நிகழ்ச்சி

திருச்சியில் பா.ஜ.க கட்சி சார்பில் ஸ்ரீரங்கத்தில் "புரொபஷனல் கனெக்ட்" நிகழ்ச்சி

திருச்சியில் பா.ஜ.க  கட்சி சார்பில் ஸ்ரீரங்கத்தில் "புரொபஷனல் கனெக்ட்" நிகழ்ச்சி வருகிற 14 ஆம் தேதி  நடைபெற உள்ளது.இது குறித்து பாஜக வின் தொழில்துறை வல்லுனர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராமன் கூறியதாவது: 

மாநில மற்றும் தேசிய அளவிலான சட்ட நிபுணர்கள், பொருளாதாரம் வல்லுநர்கள் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.முக்கியமாக பட்ஜெட்டின் தாக்கம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

 இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக சர்வீஸ் செக்டார் மீது வலுவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2047 ஆம் ஆண்டிற்குள் உலக ஜி.டி.பி.,யில் 10 சதவீதம் பங்கை இந்தியா அடைய வேண்டும் என்ற தேசிய இலக்கில் சர்வீஸ் செக்டர் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், ஆலோசனை சேவைகள், சட்டம், மருத்துவம், கல்வி மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற பல துறைகளில் வல்லுனர்களுக்கான பல்வேறு சலுகைகள் மற்றும் ஊக்கத் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. 

இந்த வாய்ப்புகளை செயல்படுத்த தொழில்துறை வல்லுநர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களின் திறன்களை மேம்படுத்தி, தேசிய வளர்ச்சியில் முன்னணி பங்காற்ற வைக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது, என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments