// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான கமிஷன் தொகையை மீண்டும் வழங்க கோரி வணிக வங்கி தொடர்பாளர்கள் மனு

நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான கமிஷன் தொகையை மீண்டும் வழங்க கோரி வணிக வங்கி தொடர்பாளர்கள் மனு

 திருச்சியில் வணிக வங்கி தொடர்பாளர்களாக பணியாற்றும் 50-க்கும் யில் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கொடுத்த மனுவில், கடந்த 15 ஆண்டுகளாக முதியோர் உதவித் தொகை திட்டம் மூலம் மக்களுக்கு கிடைக்கும் தொகையை அவர்களின் வீட்டுக்கே தேடிச்சென்று கொடுத்து வருகிறோம்.

 அரசு நலத்திட்டங்கள், மகளிர் உரிமைத் தொகை ,தமிழ்ப்புதழ்வன், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களுக்காக வங்கிக்கணக்கு தொடங்க மக்களுக்கும், வங்கிக்கும் பாலமாக இருந்தோம். 

இதற்காக அரசு கொடுக்கும் கமிஷனை வைத்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது வழக அரசு கமிஷன் வழங்குவதை நிறுத்தி விட்டதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு கமிஷன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Post a Comment

0 Comments