// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** டிஜிட்டல் நச்சிலிருந்து விடுபட யோகா சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

டிஜிட்டல் நச்சிலிருந்து விடுபட யோகா சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி வேதியியல் துறை சார்பில் டிஜிட்டல் நச்சிலிருந்து விடுபட யோகா சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் மரியதாஸ் வழிகாட்டுதலில் வேதியியல் துறை தலைவர் முனைவர் டென்னிஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. யோகா பயிற்றுனர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று டிஜிட்டல் நச்சிலிருந்து விடுபட யோகா குறித்து பேசுகையில்...

அலைபேசி அடிமைத்தனம் என்பது சமூக ஊடகங்கள், விளையாட்டுகள் மற்றும் இணைய பயன்பாட்டிற்காக செல்பேசியை அளவுக்கு அதிகமாகவும், கட்டுப்படுத்த முடியாமலும் பயன்படுத்துவதாகும். இது உறக்கம் இல்லாமை, கண் எரிச்சல், தலைவலி, கவனச்சிதறல், நேர விரயம் மற்றும் சமூகத் தனிமை போன்ற உடல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அலைபேசி அதிக பயன்பாட்டால், வயதுக்கு மீறிய பேச்சுகள், சமூக ஊடகங்களில் மூழ்கி வழிமாறுகின்றனர்.




அலைபேசி பயன்பாட்டு நேரத்தை 45-60 நிமிடங்களுக்கு ஒருமுறை இடைவெளி விட்டுப் பயன்படுத்த வேண்டும் வாரம் ஒரு முறை அலைபேசி தவிர்க்க வேண்டும். அளவுக்கு மீறினால் அலைபேசியும் ஆபத்தாகும், எனவே அதன் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம். டிஜிட்டல் நச்சு  மற்றும் திரை நேர மன அழுத்தத்திலிருந்து விடுபட, யோகாசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் சிறந்த தீர்வாகும். ஆரோக்கியமான உணவு, ஏழு மணி நேர உறக்கம், தினசரி நாற்பது நிமிடங்கள் நடைபயிற்சி போன்ற ஆரோக்கிய அடிப்படை விதிமுறைகளை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். தினசரி தியானம், யோகா பயிற்சி செய்வதால் கழுத்து,முதுகு வலியினை போக்க இயலும். டிஜிட்டல் நச்சுக்கான முக்கிய யோகா மற்றும் பிராணாயாம பயிற்சிகளில் பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும்.மனதிலுள்ள தேவையற்ற சிந்தனைகளை நீக்கி, புத்துணர்ச்சியை அளிக்கும்டிஜிட்டல் திரையை பார்க்கும் நேரத்தைக் குறைத்து, இயற்கையுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்.எளிய யோகா பயிற்சிகள் மூலம் டிஜிட்டல் உலகிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான மனநிலை மற்றும் உடல் நலத்தைப் பெற முடியும் என்றார். முன்னதாக வேதியியல் துறை மாணவி பிளசி மற்றும் மதுமிதா நிகழ்வினை தொகுத்தனர்.ஷைனி வரவேற்க, நிறைவாக ரோமால்ட் லிவிங்ஸ்டன் நன்றி கூறினார்.  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் அல்போன்சா ஜூலியட் ஹெலினா நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். வேதியியல் துறை முதுநிலை மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments