// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** சிறந்த சமூக சேவைக்கான ஆளுநர் விருது பெற்ற திருச்சி சமூக செயற்பாட்டாளரைப் பாராட்டிய பத்மஸ்ரீ விருதாளர்!

சிறந்த சமூக சேவைக்கான ஆளுநர் விருது பெற்ற திருச்சி சமூக செயற்பாட்டாளரைப் பாராட்டிய பத்மஸ்ரீ விருதாளர்!

திருச்சி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது

உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை  கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்டி தமிழ்நாடு ஆளுநர்,‌2026 குடியரசு தினத்தன்று தனிநபர்‌ பிரிவில் சிறந்த சமூக சேவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர் பிரிவில் முன் மாதிரியான சேவை,  அர்ப்பணிப்பு மற்றும் சமூக நலனில் .

கொண்ட தன்னலமற்றப் பணியைப் பாராட்டி ஆளுநர் விருதினை வழங்கினார். கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பத்மஸ்ரீ சதாமோதரன், ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக வளர்ச்சி யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.மக்கள் சக்தி இயக்க‌ மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு  செயல் தலைவருமான கே.சி. நீலமேகம், செயலாளர் பேராசிரியர் முனைவர் கி.சதீஸ்குமார், இனணச்செயலாளர் ஆர்.கே.ராஜா, மக்கள் சக்தி இயக்க துணைச் செயலாளர் வெ.இரா.சந்திரசேகர், முனைவர் சந்திரசேகரன்,  திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது ஷபி, தமிழ்நாடு சிறார்  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருச்சி மாநகர செயலாளர் கார்த்திகா கவின் குமார் உட்பட பலர் பாராட்டினர்.

Post a Comment

0 Comments