// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது

அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் நடந்த உண்ணாவிரதத்திற்கு சங்கத்தின் தலைவர் கு பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அமராவதி கூட்டுறவுத்துறை சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தில் ரேஷன் கடை வாடகை உயர்வை பணியாளர்களை கட்ட வலியுறுத்ததை எதிர்த்து குரல் கொடுத்த பாத்திமா என்ற ஊழியரை கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரது உறவினர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் ரேஷன் கடைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய பொருட்களை வாங்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்ததை கண்டித்தும் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர் .

மேலும் அமராவதி சூப்பர் மார்க்கெட் நிர்வாக சீர்கேடு தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அரசு பணியாளர்கள் சங்கத்தில் உள்ள பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments