// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய படிப்போம் பகிர்வோம் இலக்கிய அமைப்பினர்!

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய படிப்போம் பகிர்வோம் இலக்கிய அமைப்பினர்!

படிப்போம் பகிர்வோம் இலக்கிய அமைப்பு சார்பில் ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு விழா ஸ்ரீமன் மத்வ சித்தாந்த சபை வளாகத்தில் நடைபெற்றது.

உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்டி தமிழ்நாடு ஆளுநர்,‌குடியரசு தினத்தன்று தனிநபர்‌ பிரிவில் ஆளுநர் விருதினை வழங்கினார். ஆளுநர் விருது பெற்ற யோகா ஆசிரியர் விஜயகுமாரை படிப்போம் பகிர்வோம் இலக்கிய அமைப்பு நிறுவனத் தலைவர் தேவராஜ் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். எழுத்தாளர் சற்குணன், சமூக செயற்பாட்டாளர் விவேகானந்தன், கவிஞர் மாரிமுத்து, பாஸ்கரன், ராமலிங்கம், சின்னசாமி, ஸ்ரீதர், இளங்கோ, மணிமாறன், கணேஷ், பிரபு, சிவக்குமார், அன்வர் பாஷா, சரண்குமார், ராஜேந்திரன் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments