// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை.

திருச்சி காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை.

நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில பொருளாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கிருஷ்ணசாமி தலைமையிலான நிர்வாகிகள், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி காவிரி அருகே அமைந்துள்ள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு பம்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று முழுமையாக பழுதடைந்துள்ளது. மற்றொன்றும் முழு நேரம் இயங்காமல் 12 மணி நேரம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.


இதனால் சாக்கடை கழிவு நீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல், நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. இது பொது மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும், காவிரி ஆற்றின் தூய்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. 

எனவே உடனடியாக பழுதான பம்பை சீரமைத்து, காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments