திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை நரம்பியல் நோயாளி ஒருவருக்கு அதிநவீன கேத்லேப் சிகிச்சை முறையில் மூளை இரத்தக்குழாயில் ஸ்டண்ட் பொருத்தி சாதனை படைத்துள்ளது. இது குறித்து திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் பிரணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. ஒரு கடினமான நோய் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை அட்டாக், நவீன மருத்துவத்துறை உதவியால் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து வருகின்றோம்,நோயாளி ஒருவருக்கு மூன்று மாதங்கள் முன்பே ஸ்ட்ரோக் அட்டாக் வந்துள்ளது. அப்போது மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களின் ஒன்றில் 95 சதவீதம் அடைப்பு ஏற்பட்டதை, இங்கே உள்ள நவீன கேத் லேப் மூலம் நோயை உறுதிப்படுத்தி ஆரம்பத்தில் மருந்துகள் மூலம் இந்த அடைப்பை கட்டுப்படுத்தி நோயாளிக்கு பக்கவாதத்தை குணப்படுத்தினோம். ஆனால் ஒரு வாரம் முன்பு நோயாளிக்கு மீண்டும் ஸ்ட்ரோக் அட்டாக் வந்தது. அதுவும் முன்பை விட வீரியம் அதிகமாய் வந்தது. அவருக்கு கூடவே இன்னொரு சிக்கலான குடல் புண் ஏற்பட்டு இரத்தம் கசிந்து கொண்டே பிரஷர் குறைந்துவிட்டது. இரண்டும் தனி பிரச்சனைகள் .
சிறப்பு மருத்துவ குழுவினர் ஆலோசனையில் குடல் புண் மற்றும் ஸ்ட்ரோக் சிகிச்சை அளித்துள்ளோம். மூளைக்கு செல்லும் முக்கிய இரத்தக்குழாய் ஆன (இன்டர்னல் கரோட்டிட் ஆட்ரி,)இண்ரா க்ரானியல் பாகத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டெண்ட் வைத்து ஸ்ட்ரோக் அட்டாக்கிலிருந்தும் குடல் புண்ணையும் மருந்துகள் மூலம் சரி செய்துள்ளோம்.
நோயாளிக்கு பேச்சு முழுமையாகவும், பலவீனமும் 90 சதவீதம் குணமடைந்துள்ளது. இதேபோல் பல நவீன நியூரோ இண்டர்வென்ஷன் மூளை இரத்தக்குழாய் அடைப்பு சிகிச்சைகள், ஸ்ட்ரோக், அனுரிசம் மற்றும் இரத்த கசிவுக்கு சிகிச்சை அளித்துள்ளார் .
மற்றும் இரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர் ஆனந்த் கை மற்றும் கால்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு கேத் லேப் மூலம் சிறப்பு சிகிச்சை அளித்துள்ளார் .திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் பொது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்





0 Comments