// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு!

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு!

 உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்டி தமிழ்நாடு ஆளுநர்,‌குடியரசு தினத்தன்று தனிநபர்‌ பிரிவில் ஆளுநர் விருதினை வழங்கினார். 

ஆளுநர் விருது பெற்ற யோகா ஆசிரியர் விஜயகுமார் அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா உள்ளிட்டோர்க்கு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் தண்ணீர் அமைப்பு செயல்தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் பேரா.கி.சதீஸ்குமார், துணைசெயலாளர் ஆர்.கே.ராஜா ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

Post a Comment

0 Comments