// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு மனிதநேயச் செம்மல் விருது!

உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு மனிதநேயச் செம்மல் விருது!

 திருச்சி முத்தமிழ் சங்கம்  மூன்றாம் ஆண்டு விழாவில் கவியரங்கம் பட்டிமன்றம் பரிசளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் அரங்கில் நடைபெற்றது. 

திருச்சி முத்தமிழ் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார். திருச்சி முத்தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் சக்திவேல் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரம்யா ஆண்டறிக்கை வாசித்தார். திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார், திருச்சி முத்தமிழ் சங்க ஆலோசகர் முனைவர் செயலாபதி, கவிஞர் கவிநிலா மோகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மூளை நரம்பியல் நிபுணர் மருத்துவர் எம்.ஏ.அலீம் சிறப்புரையாற்றி உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்ற பணியினைப் பாராட்டி மனிதநேயச் செம்மல் விருதினை வழங்கினார்.முனைவர் நெடுஞ்செழியன் நிகழ்வினை நெறியாள்கை செய்ய நிறைவாக கவிஞர் தில்லை சண்முகம் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments