// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** துணிப் பையை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

துணிப் பையை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

 திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் திருச்சி புத்தகத் திருவிழா 2026  சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அரங்கு எண்17 இல் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம்,ஈகை சிறகுகள் அறக்கட்டளை சார்பில் துணிப்பையை கையில் எடுப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் விஜயகுமார், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது சபி, திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர்வட்ட தலைவரும், யுகா அமைப்பின் தலைவருமான அல்லிராணி பாலாஜி, எழுத்தாளர் வாழையூர் குணா, சதாசிவம்,சுந்தரேசன் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் துணிப்பைகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, நீடித்த உழைப்பு மற்றும் பொருளாதாரச் சிக்கனம் உள்ளிட்ட பல நன்மைகளைத் தருகிறது. இவை பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்து, மண்ணின் தரத்தை மேம்படுத்தி, பசுமையான சூழலை உருவாக்க உதவுவதை வலியுறுத்தினர்

Post a Comment

0 Comments