திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அரங்கு எண்17 இல் எழுத்தாளர் சதாசிவம் எழுதிய சூத்திரதாரி நூல் அறிமுக விழா நடைபெற்றது. எழுத்தாளர் சதாசிவம் சூத்திரதாரி நூலை அறிமுகப்படுத்த ,திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் விஜயகுமார், தொட்டியம் தமிழ்ப் பேரவைத் தலைவர் இல. மணி சேகர், எழுத்தாளர் தமிழகன் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0 Comments