திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அரங்கு எண்17 இல் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் பெ.விஜயகுமார் எழுதிய தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் அறிமுக விழா நடைபெற்றது.
எழுத்தாளர் பெ.விஜயகுமார் எழுதிய தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூலை திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் த.இந்திரஜித் அறிமுகப்படுத்த திருச்சி மாவட்ட மைய நூலக அலுவலர் சரவணகுமார் பெற்றுக்கொண்டார். அங்குசம் இதழ் ஆசிரியர் ஜே.டி.ஆர், எழுத்தாளர் சதாசிவம் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0 Comments