// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** பெயர் விலாசம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

பெயர் விலாசம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

 திருச்சி தீரன் நகர் வணிக கடை அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார். உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

திருச்சி மாநகரம் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய காவலர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று மேற்படி நபரை பார்த்து விசாரித்த போது அவர் மயக்க நிலையில் பேச முடியாமல் இருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்தவரை பற்றி அவரது புகைப்படத்தை வைத்து விசாரணை செய்ததில் அப்பகுதியில் சுற்றித்திரிந்து யாசகம் கேட்டு உண்டு கிடைத்த இடத்தில் உறங்கி தெருவில் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தொடர் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இறந்தவர் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு திருச்சி மாநகரம் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதத்திற்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

Post a Comment

0 Comments