திருச்சி மாவட்டம் கீழ முல்லைக்குடி படித்துறைக்கு எதிரே உள்ள காவிரி ஆற்றுத்திட்டில் சுமார் 40-50 வயது மதிக்கத்தக்க ஊர் பெயர் விலாசம் தெரியாத ஆண் பிரேதம் ஊதா கலர் கட்டம் போட்ட கைலி, ஊதா கலர் முண்டாப் பனியன் அணிந்தவாறு உடல் முழுவதும் அழுகிய நிலையில் நீரில் உப்பிய நிலையில் முகம் அடையாளம் தெரியாதவாறு கிடந்தது.
தகவல் அறிந்த திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் மேற்படி நபர் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. மேற்படி நபர் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருவெறும்பூர் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் தமிழ்ச்செல்வன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார்.தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் சமூக செயற்பாட்டாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

0 Comments