சாதி,மத,இன வேறுபாடின்றி உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்டி தமிழ்நாடு ஆளுநர்,குடியரசு தினத்தன்று தனிநபர் பிரிவில் சிறந்த சமூக சேவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர் பிரிவில் முன் மாதிரியான சேவை, அர்ப்பணிப்பு மற்றும் சமூக நலனில் கொண்ட தன்னலமற்றப் பணியைப் பாராட்டி ஆளுநர் விருதினை வழங்கினார்.
திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் நடத்திய பாராட்டு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் பெரியார் விருது பெற்ற முனைவர் நெடுஞ்செழியன் ஆளுநர் விருது பெற்ற யோகா ஆசிரியர் விஜயகுமார், அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

0 Comments