2026 தேர்தலில்அகில இந்திய மஜ்லிஸ் கட்சி போட்டியிடும் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மரக்கடை அருகே உள்ள தனியார் அரங்கில் மாநில இளைஞரணி செயலாளர் ஷேக் முகமது பாருக் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநில தலைவர் வக்கீல் அஹமது,மாநில பொருளாளர்,இன்டர்நேஷனல் மஜீத்,துணைப் பொதுச் செயலாளர் கமுர்தீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மாநில செயலாளர் உணர்வு இப்ராஹீம், மாநில இணை பொதுச் செயலாளர் ஆல்ஃபா நஜீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மாநிலத் தலைவர் வக்கீல் அஹமது பேசுகையில்... அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தேசிய கட்சி இந்த கட்சி ஜாதி மதம் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக பார்க்கக்கூடிய கட்சியாகவும் அவர்களுக்காக உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் கட்சியாகவும் தேசிய அளவில் செயல்பட்டு வருகிறது.



0 Comments