// NEWS UPDATE *** வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ///////////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ வேட்புமனு தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்! *** மே நான்காம் தேதிக்கு பிறகு திராவிட மாடல் 2.0 தொடர்ந்து செயல்படும் - திருச்சி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மே நான்காம் தேதிக்கு பிறகு திராவிட மாடல் 2.0 தொடர்ந்து செயல்படும் - திருச்சி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இனிக்கோ இருதரராஜ் மற்றும் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு  அப்துல் சமது ஆகியோர் மீண்டும் போட்டி இருக்கின்றனர்.

இவர்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி  அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அறிமுக நிகழ்ச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம்  நடைபெற்றது.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி..என் மீது முதல்வர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாரோ அதேபோல் எனது தொகுதி மக்களின் உள்ள அதிக நம்பிக்கையில் எனக்கு மீண்டும் மூன்றாவது முறையாக போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார்.மக்களிடம் எங்களுடைய சாதனைகள் சொல்லி வாக்கு சேகரிப்போம். எங்களுடைய பலம் என்பது தோழமைக் கட்சியினுடையது. எனவே எங்களது தோழமைக் கட்சியான காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகளை கௌரவப்படுத்தி வருகிறோம். மிகப்பெரிய உற்சாகத்தை வழங்கி உள்ளனர்.

நீங்கள் தமிழ்நாட்டின் குடிமகனாக இருந்தால். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்.எங்களது முதலமைச்சர் பொறுத்த வரை தெளிவாக கூறிவிட்டார் எங்களது போட்டி தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்பதுதான்.நமது நாட்டிற்கு எதிராக செயல்படக்கூடிய அணியை வீழ்த்துவது தான் எங்களது ஒரே லட்சியம்.

பெருமையான விஷயம் திராவிட மாடல்தான்  மக்களுடைய ஒவ்வொரு ஓட்டும் எவ்வளவு முக்கியமானது என்பதை சொல்கிறேன். அவர்கள் ஓட்டுப் போட்டு எங்களை தேர்ந்தெடுத்து மூலமாகத்தான் இத்தனை ஆண்டு யாரும் சிந்திக்காத திட்டங்களை கொண்டு வருகிறோம். சுமார் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் பட்சமாக 

கிட்டத்தட்ட ஒன்றாம் வகுப்பு முதல்  ஐந்தாம் வகுப்பு வரை பயன்பெறும் காலை உணவு திட்டத்தை இது வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.


தற்போது அதை விரிவுபடுத்தி திட்டமாக எட்டாம் வகுப்பு வரை  காலை உணவு திட்டத்தை 15 லட்சம் பிள்ளைகள் பயன் பெறுகின்றனர். கல்வி அறிவை முறையாக கொடுத்தாலே போதும் அதன் பிறகு அந்த பிள்ளைகள் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற பிள்ளைக்கு அறிவு கண்டிப்பாக வரும். 


திருவரம்பூர் தொகுதி என்பது எப்படி வளர்ச்சி பெற்ற தொகுதியாக மாறி உள்ளது என்பது உங்களுக்கு தெரியாத ஒன்று. அதற்கு சம்பந்தமாக மாற்று வழி ஒன்றை தர வேண்டும். அதற்காக அரை வட்டச் சாலை என்பதை முழு வட்டச் சாலையாக வர வேண்டும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளேன் தொகுதி சார்ந்த திட்டங்களும் கண்டிப்பாக வரும் எங்களைப் பொறுத்தவரை வளர்ச்சி பாதையில்  சென்று கொண்டிருக்கிறோம் அதை சார்ந்த கட்டமைப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பது எங்களது கடமை. 


எனவே கோரிக்கை பத்து என்றால் பத்தையும் செய்து விட்டோம் என்று சொல்லவில்லை ஏழு கோரிக்கைகளை  செய்துள்ளோம். மீதி மூன்றை எப்படி செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

எங்களைப் பொறுத்தவரை முப்பது நாட்கள் என்பது சின்ன இடைவேளை தான்.

மே நாலாம் தேதி ரிசல்ட் வரும் பொழுது திராவிடம் மாடல் 2.0 தொடர்ந்து வளர்ச்சி நோக்கி செல்வோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments