// NEWS UPDATE *** வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ///////////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ வேட்புமனு தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்! *** திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட முதன் முதலில் விருப்ப மனு அளித்த விஜய் முதல் ரசிகர் மன்ற தலைவர் ஆர் கே ராஜா மகிழ்ச்சி அறிவிப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட முதன் முதலில் விருப்ப மனு அளித்த விஜய் முதல் ரசிகர் மன்ற தலைவர் ஆர் கே ராஜா மகிழ்ச்சி அறிவிப்பு

 திருச்சி கிழக்கு  தொகுதியில்  தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டி.திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க.தலைவர் விஜய் போட்டியிட்டு வென்று தமது அரசியல் கணக்கை துவக்க வேண்டுமென விஜய் மன்ற முதல் மாவட்ட தலைவரும் அவரது தீவிர விசுவாசியுமான ஆர்.கே .ராஜா விரும்பினார்.

இதற்கான முயற்சியின் முதல் கட்டமாக த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமென (ரூ.10.000 DD) விருப்ப மனு  பெற்று அக்கட்சி தலைமையிடம் வழங்கினார்.

தற்போது விஜய் திருச்சி கிழக்கு தொகுதியிலும் பெரம்பூரிலும் போடியிடுவதாக அறிவிப்பு வந்ததையொட்டி ஆர்.கே.ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன்  வரவேற்பு தெரிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.



பின்னர் ஆர்கே ராஜா கூறுகையில்:- தமிழக வெற்றிக்கழக  தலைவர் தளபதி விஜய் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அறிவிப்பின் மூலமே தமது வெற்றிக்கணக்கை துவக்கிவிட்டார்.

பொதுமக்கள்- ரசிகர்கள்- இளைஞர் இளம்பெண்கள்- மாணவ மாணவியரின் அமோக ஆதரவை பெற்ற தலைவர்  விஜய்க்கு திருச்சி கிழக்கு தொகுதியில் முழு மூச்சாக பிரச்சாரம் செய்து வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம் என்றார்.




நடிகர் விஜய்க்காக முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவரும்   

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டுமென  முதல் முதலில் விருப்பமனு கொடுத்தவரும் ஆர்.கே.ராஜா தான் என்பது குற்ப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments