// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** பாஜகவிற்கு ஒதுக்கப்படாத தொகுதியை சேர்ந்த தொண்டர்கள் விரக்தியில் ஆதங்கத்தை தான் வெளிப்படுத்துகிறார்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை திருச்சியில் நாராயணன் திருப்பதி பேட்டி

பாஜகவிற்கு ஒதுக்கப்படாத தொகுதியை சேர்ந்த தொண்டர்கள் விரக்தியில் ஆதங்கத்தை தான் வெளிப்படுத்துகிறார்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை திருச்சியில் நாராயணன் திருப்பதி பேட்டி

பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,...இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என கூறுவது பொய் எதிர்க்கட்சிகள் அந்த வதந்தியை பரப்புகிறார்கள் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் திறமையாக கலி ஆண்டு எரிவாயு தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள் இதனால் விலைவாசி உயர்வும் ஏற்படவில்லை பெட்ரோல் டீசல் விலையும் உயரவில்லை.

எல்பிஜி சிலிண்டர் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. வணிக எரிவாயு சிலிண்டரில் விநியோகம் 70% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது அந்த விநியோகத்தை முறைப்படுத்த வேண்டியது மாநில அரசின் கைகளில் தான் உள்ளது.

இந்தியாவை அமெரிக்காவும் நட்பு  நாடாக கருதுகிறது ஈரானும் நட்பு நாடாக கருதுகிறது.

பாஜகவில் இன்னும் ஒரு நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளார்கள்.பாஜகவிற்கு தொகுதி ஒதுக்கப்படாததே வேட்பாளர்கள் குறித்து சில இடங்களில் கட்சித் தொண்டர்கள் ஆதங்கத்தை தான் வெளிப்படுத்துகிறார்கள் அவர்கள் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டை மீறி எதையும் செய்ய மாட்டார்கள் ஆதங்கம் என்பது வேறு எதிர்ப்பு என்பது வேறு.


காங்கிரஸ் கட்சியை தலைமையை அக்கட்சியின் எம் பி ஜோதிமணி காரி உமிழ்ந்துள்ளார் இதிலிருந்து அந்த கட்சியின் நிலை தெரிந்து விடுகிறது அதுபோன்ற ஒரு நிலை எங்கள் கட்சியிலையோ எங்கள் கூட்டணியிலோ இல்லை என தெரிவித்தார்.


.

Post a Comment

0 Comments