// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சி சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் கல்வி நிறுவனங்களில் ‘கிரேசியா 26’ கலாச்சார விழா கோலாகலம் - மாணவ மாணவிகள் ஆடி பாடி கொண்டாட்டம் - 95 சதவீதம் பிளேஸ் மெண்ட் சாதனை

திருச்சி சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் கல்வி நிறுவனங்களில் ‘கிரேசியா 26’ கலாச்சார விழா கோலாகலம் - மாணவ மாணவிகள் ஆடி பாடி கொண்டாட்டம் - 95 சதவீதம் பிளேஸ் மெண்ட் சாதனை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கே ராமகிருஷ்ணன் குரூப் ஆப் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கிரேசியா 26” எனும் இரு நாள் கலாச்சார விழா கல்லூரி வளாகத்தில்  நடைபெற்று வருகிறது.

விழாவின் முதல் நாளான இன்று வெள்ளிக்கிழமை, பிரபல பாடகர்கள் ஹரிச்சரண் மற்றும் ராக்ஷிதா சுரேஷ் கலந்து கொண்டனர். 


இந்த லைவ் கான்சர்ட் மாணவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக  நாளை  டிஜே  மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கல்வி நிறுவனங்கள் வழக்கமாக கல்வி மற்றும் பிளேஸ்மென்ட் துறையில் முன்னிலை வகிப்பதோடு, மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் இத்தகைய கலாச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி செயல் இயக்குனர் குப்புசாமி தெரிவித்தார். 


மேலும் அவர் கூறும் போது... இந்த ஆண்டுக்கான பிளேஸ்மென்ட் சாதனையாக, 2026 பேட்சில் பிளேஸ்மென்ட் விருப்பம் தெரிவித்த மாணவர்களில் சுமார் 95% பேர் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், அதிகபட்சமாக ஆண்டு சம்பளமாக ரூ.35 லட்சம் வரை ஒரு மாணவர் ஜப்பான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்



ஜப்பானிய மொழி பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்து, என் 3 மற்றும் என் 2 நிலைகளை முடித்த மாணவர்கள் நேரடியாக ஜப்பான் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 12 மாணவர்கள் ஜப்பான் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.மொத்தமாக மூன்று கல்லூரிகளை இணைத்து பார்க்கும்போது, இதுவரை 2500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 
சாப்ட்வேர் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர்.மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பயிலும் மாணவர்களும் பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தில் ஏ. ஐ.சார்ந்த பயிற்சிகள் மற்றும் சான்றிதழ்  மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.


கல்வி, பிளேஸ்மென்ட் மற்றும் கலாச்சார வளர்ச்சி ஆகிய மூன்றிலும் சமநிலை கொண்டு செயல்படும் இந்த முயற்சி, மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.

Post a Comment

0 Comments