// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** ஆளுநர் விருதாளருக்கு பாராட்டு!

ஆளுநர் விருதாளருக்கு பாராட்டு!

நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழ்நாடு புதுவை கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது நிகழ்வில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்றப் பணியினைச் பாராட்டி  2023ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநர் விருதும் பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாரை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலப் பொருளாளர் அயிலை. சிவசூரியன், கல்வி உரிமைக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் பசுமை க. மூர்த்தி முன்னிலையில் வழக்கறிஞரும் கவிஞருமான தமிழகன், சமூக செயல்பாட்டு இயக்கத்தின் மாநில முதன்மை அமைப்பாளர் ரெங்கநாதன்   ஆகியோர் பாராட்டினர்.

Post a Comment

0 Comments